குவைத்தின் அமீருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது..!!

His Highness Amir surgery successful. (image credit : IIK)

குவைத்தின் அமீர் ஷேக் சபா அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா இன்று (ஜூலை 19) காலை வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாக அமிரி திவான் அமைச்சர் ஷேக் அலி ஜர்ரா அல்-சபா அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும், அமீரை விரைவாக மீட்கவும், அவரது நல்வாழ்வை உறுதிப்படுத்தவும் சர்வ வல்லமையுள்ள இறைவனிடம் பிராத்தனை செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று (ஜூலை 18) சனிக்கிழமை அன்று அமீர் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்காலிகமாக, அமீரின் சில அரசியலமைப்பு அதிகார வரம்புகளை கையகப்படுத்த அவரது அரச மகுட இளவரசருக்கு அமீர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms