குடியிருப்பு காலாவதியாகிருந்தாலும் இவாக்ளுக்கு மட்டும் குவைத் திரும்ப அனுமதி..!!

Health staff can return to Kuwait even if their residency expired. (photo : IIK)

குவைத்தின் சுகாதார அமைச்சகத்தின் கீழ் உள்ள மருத்துவத்துறையை சேர்ந்த வெளிநாட்டவர்கள் தங்களது குடியிருப்பு காலாவதியாகிருந்தாலும் குவைத்துக்குள் வருவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று உள்ளூர் அரபு செய்தித்தாளான அல் கபாஸ் தெரிவித்துள்ளது.

மருத்துவர்கள், செவிலியர், கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் MoH இன் கீழ் ஆய்வகங்கள் என பணிபுரியும் 1000க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் வெளிநாட்டில் உள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுநோய்க்கு முன்னர் தங்கள் நாடுகளுக்குச் சென்று திரும்பி வரமுடியாத நிலையில் உள்ள மருத்துவ பணியாளர்களை குவைத்திற்குள் நுழைவதற்காக சுகாதார அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நடவடிக்கை குவைத்தில் பணிபுரியும் மருத்துவ பணியாளர்களுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0

Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

Twitter : https://twitter.com/kuwaittms?s=08