குவைத்தில் இன்று முதல் வெள்ளிக்கிழமை சந்தை மீண்டும் திறப்பு..!!

Friday Market to reopen today
Friday Market to reopen today. (Image credit : TimesKuwait)

குவைத்தில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு முன்பு மூடப்பட்ட பின்னர் ராய் பகுதியில் உள்ள வெள்ளிக்கிழமை சந்தை இன்று (செப்டம்பர் 10) மீண்டும் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

COVID-19 பரவுவதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகராட்சி மார்ச் 13 அன்று சந்தையை முடியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : COVID-19 க்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்ட ஜப்பானிய மருத்துவம் குவைத்தில் வெற்றி..!!

தற்போது, மறு திறப்பின் ஒரு பகுதியாக கூட்ட நெரிசலைத் தடுக்க புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடையில் ஜூன் 10 அன்று மீண்டும் திறக்கப்பட்டது, பிறகு அதற்கு அடுத்த நாளே மீண்டும் மூடுவதாக அறிவிக்கப்பட்டது.

சரியான ஒருங்கிணைப்பு இல்லாமை, கூட்டநெரிசல், சமூக இடைவெளி கடைபிடிக்காமல் இருந்தது போன்ற காரணங்களால் மூடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத் மனிதவள ஆணையம் 60 வயதுக்கு மேற்பட்ட 68,318 வெளிநாட்டினரின் பட்டியலைத் தயாரித்துள்ளது..!!

மேலும், அங்கு உள்ள கடை உரிமையாளர்கள் எந்தவொரு சுகாதார விதிமுறைகளையும் பின்பற்றவில்லை, எனவே சந்தையை மூடுவதற்கு முடிவு எடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகராட்சி நிலைமையை மறுபரிசீலனை செய்து சந்தையை மீண்டும் திறக்க புதிய தேதியை நிர்ணயிக்கும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது திறக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : அரபு நாடுகளின் சாலை தரப் பட்டியலில் குவைத் 6 வது இடத்திற்கு முன்னேற்றம்..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook

? Twitter