குவைத்தில் பக்ரீத்திற்கு பிறகு வெள்ளிக்கிழமை சந்தை திறக்கப்படும்..!!

Friday Market to open after Eid Al-Adha Festival. (image credit : Q8india)

குவைத்தில் ஈத் அல்-ஆதாவிற்கு (பக்ரீத்) பிறகு பொதுமக்களுக்கான வெள்ளிக்கிழமை சந்தையைத் திறக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக அல்-சாயாஸா தினசரி தெரிவித்துள்ளது.

மேலும், COVID-19 வைரஸ் பரவுவதைத் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத் விமான நிலையத்தில் பயணிகளுக்கு உதவ DGCA புதிய பயன்பாட்டு (Application) அறிமுகம்..!!

அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்த பின்னர் வெள்ளிக்கிழமை சந்தையைத் திறக்க அறிவுறுத்தியுள்ளதாக குவைத் நகராட்சி உறுதிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து பொருட்கள் மற்றும் ஸ்டால்கள் உட்பட முழுப் பகுதியையும் சுத்தம் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட மறுக்கும் பெற்றோர்களுக்கு அபராதம் மற்றும் சிறை..!!

விற்பனையாளர்கள் நோயின் எந்த அறிகுறிகளும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வதையும் நகராட்சி சந்தை நிர்வாகத்திற்கு வலியுறுத்தியுள்ளது.

மேலும், சந்தையின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் எந்தவிதமான இடையூறுகளையும் தடுக்க உள்துறை அமைச்சகத்தின் பணியாளர்களால் நிர்வகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் ஷாப்பிங் மால்களின் வேலை நேரங்கள் இன்று முதல் மாற்றம்..!!

கொரோனா வைரஸ் காரணமாக வெள்ளிக்கிழமை சந்தை பூட்டப்பட்டது, பிறகு மீண்டும் திறக்கப்பட்ட போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றத்ததற்காக மீண்டும் பூட்டப்பட்டு, தற்போது பக்ரீத்திற்கு பிறகு திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms