குவைத்தின் சில கடற்கரை பகுதிகளில் மீன்கள் இறந்து கரை ஒதுங்கியது..!!

Flock of dead fishes found in seashores of Kuwait.

குவைத்தின் சில கடற்கரை பகுதிகளில் மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை அமைச்சகம் இது குறித்து ஆய்வுகள் துவங்கியுள்ளது என்று அதன் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

குவைத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இதுபோல் கடல் தண்ணீரில் வெப்பத்தின் அளவு அதிகரித்து ஆக்சிஜன் அளவு குறைந்தநிலையில், இதுபோன்று மீன்கள் இறந்து கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, குவைத்தின் Shuwaikh, Sulaibikhat மற்றும் Doha போன்ற கடற்கரை பகுதிகளில் இந்த காட்சிகள் காணமுடிந்தது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.