குவைத்தில் குடியிருப்பு கட்டிடத்தின் ஐந்தாவது மாடி ஜன்னலில் இருந்து விழுந்து ஐந்து வயது குழந்தை மரணம்..!!

five year old falls to death in Hawally
five year old falls to death in Hawally. (image credit : Manas Media)

குவைத்தின் ஹவாலி பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தின் ஜன்னலில் இருந்து விழுந்து ஐந்து வயது குழந்தை மரணம் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது.

குவைத் ஹவாலி கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் உள்ள தனது குடும்பத்தின் குடியிருப்பின் ஜன்னலில் இருந்து விழுந்ததில் ஐந்து வயது குழந்தை இறந்தது என்று பாதுகாப்பு ஆதாரங்களை மேற்கோள் காட்டி அல் ராய் தினசரி செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், இந்த சிறுவன் எகிப்து நாட்டை சேர்ந்தவன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தின் ஜிலீப் அல் ஷுயோக் பகுதியில் வெளிநாட்டை சேர்ந்த தாய் மற்றும் மகள் கொலை..!!

குடியிருப்பு கட்டிடத்தின் ஜன்னலில் இருந்து விழுந்ததில் தலையில் பலத்த காயம் மற்றும் பல்வேறு எலும்பு முறிவுகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலையில் பலத்த காயம் மற்றும் பல்வேறு எலும்பு முறிவுகளுடன் குவைத் முபாரக் மருத்துவமனையில் ICU வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஆவணங்கள் குறிப்பிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முபாரக் மருத்துவமனையின் மருத்துவருக்கு போராடியும் சிறுவனின் உயிரை காப்பாற்ற முடியவில்லை, அந்த சிறுவன் இறந்துவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க : வளைகுடா நாடுகளில் புகையிலை நுகர்வு விகிதங்கள் அதிகம் உள்ள நாடு குவைத் : சமீபத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்

இது குறித்து அந்த சிறுவனின் தந்தை கூறுகையில், கட்டிடத்தின் இணைப்பு குறையில் குழைந்தை விளையாடிக்கொண்டு இருக்கும்பொழுது, குழந்தை ஜன்னலிலிருந்து விழுந்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு மேலும், சட்ட நடவடிக்கைகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தில் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு புதிய பதிவு சேவை தொடக்கம் – MOI

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms