குவைத் பல்கலைக்கழக அறிவியல் கல்லூரியில் படிக்கும் ஐந்து மாணவர்களுக்கு COVID-19 தொற்று இருப்பது உறுதி..!!

Five students infected from coronavirus in College of Science at Kuwait University
Five students infected from coronavirus in College of Science at Kuwait University. (image credits : Q8india)

குவைத் பல்கலைக்கழக அறிவியல் கல்லூரியில் படிக்கும் ஐந்து மாணவர்கள் கொரோனா வைரஸால் (COVID-19) பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் பல்கலைக்கழக அறிவியல் கல்லூரியில் படிக்கும் ஐந்து மாணவர்கள் கடந்த வாரம் இடைக்கால செமஸ்டர் தேர்வில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தின் ஜிலீப் அல் ஷுயோக் பகுதியில் வெளிநாட்டை சேர்ந்த தாய் மற்றும் மகள் கொலை..!!

பின்னர் அவர்களின் சோதனைகளின் முடிவுகள் “POSITIVE” என்று வந்த பின்னர் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது என்று அல் ஜரிடா தினசரி தெரிவித்துள்ளது.

ஒரு பத்திரிகை அறிக்கையின்படி, கல்லூரியில் உள்ள ஆசிரியர் உறுப்பினர்களில் ஒருவர் கடந்த வாரம் செமஸ்டர் தேர்வில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் சோதனை மாதிரிகளை எடுக்கும்படி கேட்டு ஒரு மின்னஞ்சல் அனுப்பினார், ஏனெனில் நடத்தப்பட்ட சோதனைகளில் அவரது பாடநெறி மாணவர்களில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க : வளைகுடா நாடுகளில் புகையிலை நுகர்வு விகிதங்கள் அதிகம் உள்ள நாடு குவைத் : சமீபத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்

தற்போது, அதில் நான்கு மாணவர்களின் சோதனைகள் எடுத்தபின் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினர், அவர்களுக்கு சோதைனைகள் நடத்தப்பட்ட பின்னர், சோதனையில் அவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெரும்பாலான விஞ்ஞான துறைகள் மாணவர்களை மோசடி செய்வதைத் தவிர்ப்பதற்காக நேரடியாக பரீட்சைக்கு வர வேண்டும் என்று கட்டயப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தில் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு புதிய பதிவு சேவை தொடக்கம் – MOI

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms