குவைத் சர்வதேச விமான நிலையம் அருகே தீ விபத்து..!!

Fire near Kuwait airport doused. (image credit : IIK)

குவைத்தில் நேற்று (ஜூலை 18) சனிக்கிழமை அன்று குவைத் சர்வதேச விமான நிலையத்தின் அருகே தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே உள்ளே ஒரு உணவு நிறுவனத்தின் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பதாக குவைத் தீயணைப்பு சேவை இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவுப் பொருட்கள் நிரம்பிய 4,000 சதுர மீட்டர் அளவை கொண்ட அந்த கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது, சம்பவம் குறித்து தகவல் அறிந்த இரண்டு நிமிடங்களிலேயே தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தடைந்தனர்.

தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி ஒரு மணி நேரத்தில் தீ அணைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவம் அருகிலுள்ள விமான நிலையத்தை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms