குவைத்தில் மிர்காப் பகுதியில் உள்ள கார் பாகங்கள் விற்கும் கடைகளில் தீ விபத்து..!!

Fire destroys Auto part shops in Mirqab
Fire destroys Auto part shops in Mirqab. (image credit : IIK)

குவைத்தில் இன்று (ஆகஸ்ட் 27) வியாழக்கிழமை அதிகாலையில் மிர்காப் பகுதியில் உள்ள டயர்கள் மற்றும் கார் பாகங்கள் விற்கும் கடைகளில் எதிர்பாராத விதமாக தீடீரென்று தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு உடனடியாக ஆறு நிலையங்களைட்ச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்ததாக குவைத் தீயணைப்பு சேவை இயக்குநரகம் (KFD) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் அரசுத் துறையில் உள்ள வெளிநாட்டினர்களின் 1,183 வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் முடக்கம்..!!

அதிகாலை 2:00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக அழைப்பு வந்த பின்னர், திணைக்களத்தின் குழு ஒன்று இரண்டு நிமிடங்களுக்குள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளது என்று KFD ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

மேலும், 2,500 சதுர மீட்டர் வரை நீடித்த இந்த தீ விபத்தில் ஒன்பது கடைகள் வரை தீ பிடித்து எரித்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க : குவைத்தில் பேமிலி விசாவை தனியார் துறைக்கு மாற்றுவதற்கு தடை; வெளிநாட்டவர்கள் வருத்தம்..!!

அதே நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் 50க்கும் மேற்பட்ட வாகனங்களை தீ பிடிக்காமல் பாதுகாத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்தில் யாரும் காயமடையவில்லை என்று KDF சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய இயக்குநரகம் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்திற்கு உள்வரும் பயணிகளுக்கான PCR சோதனை சான்றிதழின் செல்லுபடியாகும் காலம் அதிகரிப்பு..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms