குவைத்தில் கொரோனா உறுதிசெய்யப்பட்ட பிலிப்பைன்ஸ் பெண்ணிற்கு பிறந்த குழந்தை..!!

Filipina infected by coronavirus gives birth in kuwait.

குவைத்தில் COVID-19 தொற்று உறுதிசெய்யப்பட்ட பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் (7 மாத கர்ப்பிணி) சிசேரியன் மூலம் குழந்தையை பெற்றெடுத்ததாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன.

தாய் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் மற்றும் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பின்னர் கொரோனா வைரஸிற்கான சிகிச்சைப்பிரிவிற்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிதாக பிறந்துள்ள குழந்தையும் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.