தொடர்ச்சியாக ஆறு நாட்களுக்கு அதிக எண்ணிக்கையிலான நோய்த்தொற்றுகளைப் பதிவு செய்வதில் முதலிடத்தைப் பிடித்துள்ளது Farwaniyaa..!!

Farwaniya becomes one of the Hotspot city for Covid-19 in kuwait. (photo : KuwaitLocal)

குவைத்தில் ஒரே நாளில் 10 இறப்புகள் மற்றும் அதிக அளவிலான பாதிப்பு எண்ணிக்கையுடன் Farwaniya பகுதி கொரோனா வைரஸ் பரவக்கூடிய முக்கிய ஹாட்ஸ்பாட் (Hotspot) பகுதியாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, குவைத் விரைவாக 10,000 கொரோனா வைரஸ் வழக்குகளை தண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, கடந்த 24 மணிநேரத்தில் 991 புதிய வழக்குகள் பதிவு செய்து, மொத்த வழக்குகளை 10,277 வழக்குகளாக உயர்த்தியுள்ளது, அதே நேரத்தில் 10 இறப்புகள் பதிவு செய்யப்பட்டு, வைரஸிலிருந்து மொத்த இறப்புகளை 75 வழக்குகளாக உயர்ந்துள்ளது.

இதில் அதிகபட்சமாக 107 தொற்றுநோய்களைப் பதிவு செய்த Farwaniya பகுதி தொடர்ச்சியாக ஆறு நாட்களுக்கு அதிக எண்ணிக்கையிலான நோய்த்தொற்றுகளைப் பதிவு செய்வதில் முதலிடத்தைப் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, நாட்டில் 128 கட்டிடங்கள் தனிமைப்படுத்தப்பட்டன மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா வைரஸ் தொற்றுக்கு பரிசோதிக்கப்பட்டனர் என்று Dr. Buthaina Al-Mudhaf அவர்கள் தெரிவித்துள்ளார்.