குவைத்தில் துப்பாக்கி முனையில் detective என்று கூறி இந்தியரிடம் கொள்ளை..!!

Fake cop robs an Indian at a gunpoint at kuwait. (photo : Times of india)

குவைத்தில் தான் ஒரு டிடெக்ட்டிவ் (detective) என்று பொய்யாக கூறி, ஒரு இந்தியரிடம் துப்பாக்கியால் மிரட்டி பணப்பையையும் மொபைல் போனையும் பறித்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகையில், ஒரு இந்தியர் சல்மியா காவல் நிலையத்திற்கு வந்து பாதுகாப்புப் படையினரிடம், அவர் தனது வாகனத்தில் போய்க்கொண்டிருக்கும் போது அவரை தான் ஒரு டிடெக்ட்டிவ் என்று கூறி ஒருவர் வாகனத்தை தடுத்ததாக தெரிவித்தார்.

பின்னர், துப்பாக்கியால் மிரட்டி இந்தியரிடமிருந்து பணம் மற்றும் மொபைல் ஆகியவற்றை பறித்துக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் பறித்துக்கொண்ட பொருள்களை எடுத்து கொண்டு அவரது வாகனத்தில் சென்றுவிட்டார் என்றும், அந்த வாகனத்தின் விவரக்குறிப்புகள் எதும் சரியாக சொல்லமுடியவில்லை என்றும் இந்தியர் தெரிவித்துள்ளார்.

தற்போது,கொள்ளை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter : https://twitter.com/kuwaittms?s=08

? Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

? Sharechat : https://www.sharechat.com/tamilmicsetkw/