2020 கடைசி காலாண்டில், சுமார் 83,500 வெளிநாட்டவர்கள் குவைத்தை விட்டு வெளியேறினர்!

expats workers left Kuwait
(PHOTO: File/AFP)

கடந்த 2020ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில், சுமார் 83,574 வெளிநாட்டவர்கள் குவைத்தை விட்டு வெளியேறினர் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் மொத்த பணியாளர்களில் வெளிநாட்டினரின் எண்ணிக்கை தற்போது 1.5 மில்லியனாக குறைந்துள்ளது என்று அல்-கபாஸ் அரபு நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

குவைத்தில் இருவருக்கு புதியவகை கொரோனா வைரஸ் பாதிப்பு!

அந்த அறிக்கையின்படி, பல அரசு நிறுவனங்கள் அவர்களுடன் பணிபுரிந்த வெளிநாட்டு ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன.

2020ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில், அரசுத் துறையில் 2,144 வெளிநாட்டினரின் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டன என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

அரசாங்கத் துறையில் பதிவுசெய்யப்பட்ட மொத்த ஊழியர்களில், வெளிநாட்டினர் தோராயமாக 29 சதவீதம் பேர். அதாவது எண்ணிக்கையில் தற்போது 95,173 ஆக உள்ளனர்.

குவைத்தின் நகராட்சியும் அனைத்து வெளிநாட்டு ஊழியர்களையும் விரைவில் பணிநீக்கம் செய்து அவர்களுக்கு பதிலாக குவைத் நாட்டவர்களை மாற்றும் என்றும் கூறியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து குவைத் செல்லும் பயணிகள் கவனத்திற்கு..!