குவைத்தில் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை..!!

Expat worker commits suicide in kuwait
Expat worker commits suicide in kuwait. (image credit : The week)

குவைத்தில் வெளிநாட்டு தொழிலாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்கொலை செய்துகொண்டவரின் நேபாள் நாட்டை சேர்ந்தவர் என்றும், அவரின் பெயர் கோகுல் பிரசாத் தமாங் வயது 35 என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவர் தான் தங்கியிருந்த சொந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவரும் குவைத் அமீரின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம்..!!

இந்த சம்பவம் குறித்து, உள்துறை அமைச்சகம் தனது கட்டுப்பாட்டு அறை மூலம் மங்காஃப் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் நடந்த மங்காஃப் பகுதிக்கு பாதுகாப்பு குழு உடனடியாக அனுப்பப்பட்டது என்றும், உடல் தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டது மற்றும் அபு ஹலிபாவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்திலிருந்து 311 இந்தியர்களுடன் சென்னை வந்தடைந்தது குவைத் ஏர்வேஸ் விமானம்..!!

அவர் மங்காஃப் பகுதியை தளமாகக் கொண்ட ஏழு பர்கர்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர் என்றும், அவர் தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து இன்னும் விசாரிக்கப்படவில்லை என்று குவைத்தில் உள்ள நேபாளி தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும், இவருக்கு மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 31 நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் – அமைச்சரவை கூட்டத்தில் முடிவு..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms