வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்பும் இந்தியர்களுக்கு COVID-19 பரிசோதனையை இலவசமாக்க வேண்டுகோள்..!!

Expat requested government authorities to provide free covid-19 test.

வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்பும் இந்தியர்களுக்கு COVID-19 பரிசோதனையை இலவசமாக்க வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளிநாடுகளில் உள்ள இந்திய தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு இந்திய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

COVID-19 பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனை வசூலிக்கும் கட்டணம் சாதாரண தொழிலாளர்களுக்கு தாங்க முடியாத நிலையில் உள்ளது என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், இதற்காக இந்திய தூதரகங்கள் வழியாக இலவச வசதி ஏற்படுத்த வேண்டும் என்றும் இந்திய தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த சில தினங்களாக தாயகம் திரும்புவதற்கு விரும்பும் இந்தியர்களின் விபரங்கள் வளைகுடா உள்ளிட்ட அனைத்து நாடுகளில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலம் ஆன்லைன் வழியாக தகவல்கள் சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தாயகம் திரும்பும் நேரத்தில் விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் நோய்தொற்று இல்லை என்ற சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்று அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்திய அரசு மற்றும் மாநில அரசுகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.