அடுத்த வாரத்தின் ஓபன் ஹவுஸ் கூட்டத்தில் குவைத்தில் உள்ள இந்திய பொறியாளர்களின் பிரச்சினை குறித்து கவனம் செலுத்தப்படும் – தூதர் ஸ்ரீ சிபி ஜார்ஜ்

Embassy set up committee to handle Community Welfare Fund
Embassy set up committee to handle Community Welfare Fund. (image credit : IIK)

குவைத் இந்திய சமூக நல நிதிக்கான (ICWF) அனைத்து கோரிக்கைகளையும் ஆராய இந்திய தூதரகம் துணைத் தலைவர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தூதரகத்தில் மூன்று பாஸ்போர்ட் அலுவலகங்களிலும் ICWF விண்ணப்பப் பெட்டிகளைத் வைக்கப்பட்டுள்ளது, இந்த நிதியை துன்பத்தில் உள்ள இந்தியர்களுக்கு உதவ முடியும் என்று தூதர் ஸ்ரீ சிபி ஜார்ஜ் அவர்கள் தூதரக ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற தனது இரண்டாவது வாராந்திர ஓபன் ஹவுஸ் கூட்டத்தில் தெரிவித்தார்.

இதையும் படிங்க : குவைத்தில் அரசுத் துறையில் உள்ள வெளிநாட்டினர்களின் 1,183 வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் முடக்கம்..!!

இந்த வாரம் ஓபன் ஹவுஸ் ICWF நிதி குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும், தூதரகம் இணையதளத்தில் ICWF உதவி படிவத்தை பதிவேற்றும் என்று தூதர் தெரிவித்தார்.

மேலும், ஒவ்வொரு வேண்டுகோளுக்கும் ஒரே நாளில் ஒரு முடிவைப் பெறுவதே எங்கள் முயற்சி என்றும் தூதர் சிபி ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

பாஸ்போர்ட் மையங்களில் நியமனம் முறை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தூதர் தெரிவித்தார், அனைத்து விண்ணப்பங்களும் ஒரே நாளில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியிருந்தார் மற்றும் பாஸ்போர்ட் மையத்தின் நேரமும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க : குவைத்தில் பேமிலி விசாவை தனியார் துறைக்கு மாற்றுவதற்கு தடை; வெளிநாட்டவர்கள் வருத்தம்..!!

அடுத்த வாரத்திற்கான ஓபன் ஹவுஸ் கூட்டத்தில் குவைத்தில் உள்ள இந்திய பொறியாளர்களின் பிரச்சினை குறித்து கவனம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூதரகம் தூதரகத்திற்குள் ஒரு கருப்பொருள் நூலகத்தையும் (Theamatic Library) துவங்கியுள்ளது, இது குவைத்தில் ஒவ்வொரு நாளும் இந்தியாவை கொண்டாடுவதற்கான டிஜிட்டல் தளமாக இந்த நூலகத்தை மாற்றுவதே எங்கள் முயற்சி என்று தூதர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : குவைத்திற்கு உள்வரும் பயணிகளுக்கான PCR சோதனை சான்றிதழின் செல்லுபடியாகும் காலம் அதிகரிப்பு..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms