உலக நாடுகளிலிருந்து குவைத் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் குவைத் குடிமக்களுக்கான எலக்ட்ரானிக் பிரேஸ்லட் (Electronic Bracelet) குவைத் வந்தடைந்ததாக சுகாதார வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
ஏறக்குறைய, அனைத்து உலக நாடுகளிலும் கொரோனா வைரஸ் (COVID -19) பரவியதைத் தொடர்ந்து 35,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு குவைத் குடிமக்கள் நாடு திரும்பத் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்று (19.04.2020) முதல் விமானங்களின் மூலம் குடிமக்கள் குவைத் திரும்புவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
திரும்பி வருபவர்கள் மற்றவர்களுடன் கலக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்காக இந்த எலக்ட்ரானிக் பிரேஸ்லட் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.