குவைத் விமான நிலையத்திற்கு எட்டு மெகா கிரேன்கள்…!

Eight 120 tonne Zoomlion tower cranes have been delivered to Kuwait Airport. (image source :vertikal.net)

குவைத் சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையம் கட்டும் பணிக்காக Zoomlion நிறுவனம் எட்டு 120 டன் பிளாட் டாப் T2850-120V டவர் கிரேன்களை குவைத்துக்கு வரவைக்கப்பட்டுள்ளது.

இந்த டவர் கிரேன்கள் சீனாவிலிருந்து இதுவரை ஏற்றுமதி செய்யப்பட்ட மிகப்பெரிய டவர் கிரேன்கள் ஆகும். மேலும், இது 27 டன் jib முனை திறன் மற்றும் 85 மீட்டர் jib அளவை கொண்டது.

Zoomlion நிறுவனத்தின் ரென் ஜீ அவர்கள் கூறுகையில், “வாடிக்கையாளர்கள் Zoomlion பிளாட் டாப் டவர் கிரங்களை தேர்வுசெய்வதன் காரணம் அதன் 85 மீட்டர் நீளமுள்ள 27 டன் கொள்ளளவு கொண்ட jib, மற்றும் அதிகபட்சமாக 120 டன் தூக்கும் திறன்கொண்டது, இது நம்பமுடியாத அளவிற்கு கனமான பொருள்களை தூக்கும் திறன் கொண்டது. மேலும், நெரிசலான கட்டுமான தளங்களிலும் இது சிறந்ததாக செயல்படும்” போன்ற காரணத்திற்காக அனைவராலும் தேர்தெடுக்கப்படுகிறது.