குவைத்தில் குடிபோதையில் மயங்கிக் கிடந்த இந்தியர்..!

Drunk indian taken to police
Drunk Indian taken to police (Photo: Arab Times)

அடையாளம் தெரியாத இந்தியர் ஒருவர் குடிபோதையில் கார் ஒன்றின் அருகில் மயங்கிக் கிடந்ததால் ஹவாலி காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார் என்று அல்-அன்பா தினசரி (Al-Anba Daily) தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு ஆதாரங்கள்படி, இது குறித்து உள்துறை அமைச்சகத்தின் செயல்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டபின்,​ போலீசார் மற்றும் துணை மருத்துவர்கள் அந்த இடத்திற்கு விரைந்து சென்றனர்.

மேலும், அந்த நபரை தூரத்தில் இருந்து பார்த்தவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும், இன்னும் சிலர் நெஞ்சுவலி காரணமாக மயங்கி இருக்கலாம் என எண்ணியதாக அரப் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக யாரும் அவர் அருகில் செல்லவில்லை.

இதனை தொடர்ந்து, துணை மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்தபோது அவர் உடலில் அதிக அளவில் ஆல்கஹால் கலந்துள்ளது என தெரியவந்ததால் காவல் நிலையத்திற்கு அவர் அழைத்து செல்லப்பட்டார்.

Source : Arab Times