வீட்டு பணியாளர்களை வேலைக்கு எடுக்கும் கட்டணம் 50 சதவீதம் அதிகரிக்கும்!

domestic workers Recruitment fees increase
Domestic workers Recruitment fees increase (PHOTO Credit: Getty Images)

ஆட்சேர்ப்பு அலுவலகங்கள் எதிர்கொள்ளும் சவால்களைக் கருத்தில் கொண்டு, வீட்டு பணியாளர்களை வேலைக்கு எடுக்கும் கட்டணம் 50 சதவீதம் அதிகரிக்கும் என்று அல் ராய் தெரிவித்துள்ளது.

அதாவது இதற்கு முன்னர், பயண மற்றும் நிர்வாக பரிவர்த்தனைகளை உள்ளடக்கிய ஆட்சேர்ப்பு கட்டணம் 990 குவைத் தினார்கள் என்று வணிக அமைச்சகத்தால் நிர்ணயிக்கப்பட்டது.

குவைத் அரசு சேவைகளில் புதிய கட்டணங்கள் அறிமுகம்!

ஆனால் தற்போது பல்வேறு காரணங்களால், ஆட்சேர்ப்பு கட்டணம் 1,400 முதல் 1,500 குவைத் தினார்கள் உயர்த்தப்பட வேண்டும் என்று ஆட்சேர்ப்பு நிறுவனங்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

தற்போது குவைத்துக்குள் நுழையும் அனைத்து வீட்டு பணியாளர்களுக்கும் பலமுறை PCR சோதனைகளை நடத்த வேண்டியுள்ளது.

மேலும், அவர்களை ஹோட்டல் அல்லது தங்குமிடத்தில் தனிமைப்படுத்தப்பட வேண்டும், இவை அனைத்துக்கும் கூடுதல் செலவுகள் ஆவதாக கூறப்பட்டுள்ளது.

சுமார் 300,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரின் Residency அனுமதிகளை புதுப்பித்த குவைத்!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter