வெளிநாட்டு வீட்டு பணியாளர்களை குவைத்துக்கு அழைத்துவருவதில் தடங்கல்!

Return expat domestic workers
Photo Credit: DGCA

வெளிநாட்டு வீட்டு பணியாளர்களை குவைத்துக்கு அழைத்துவரும் விமானங்களை இயக்கும் திட்டத்தில் எதிர்பாராத் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக குவைத் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் வீட்டுப் பணியாளர்களின் முதல் குழு செவ்வாயன்று குவைத் திரும்பியது.

சில நாடுகள், தங்கள் பணியாளர்களை குவைத்துக்கு கொண்டு செல்ல தங்களின் உள்ளூர் விமானங்கள் பங்கேற்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

இதனை அடுத்து, குவைத் ஏர்வேஸ் மற்றும் அல் ஜசீரா விமானங்களின் சேவை தடைபட்டுள்ளது.

இதனை குவைத் இயக்குநரகம் ஜெனரல் ஆஃப் சிவில் ஏவியேஷன் (DGCA) கூறுவதாக அல் ராய் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

அந்த நாடுகள் இந்தியா, எத்தியோப்பியா, பங்களாதேஷ் மற்றும் நேபாளம் என்றும் கூறப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் விமானங்கள் மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் உள்நாட்டு பணியாளர்களின் சொந்த நாட்டு விமானங்கள், குவைத் தேசிய விமானத்துடன் அழைத்துவர அனுமதிப்பதாக ஆதாரங்கள் கூறுகின்றன.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter