ரமலான் நோன்பின் போது பொதுவெளியில் சாப்பிட்டால் அபராதம் மற்றும் சிறை – குவைத் அரசு

Do not eat in public during fast - imprisonment for month and a fine of 100 KD.

குவைத் உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில், புனித ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படும் நேரத்தில் பொதுமக்கள் உணவுப் பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள் உள்ளிட்டவை பொதுவெளியில் சாப்பிட அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளது.

மேலும், இதை மீறுவோருக்கு 100 தினார்கள் அபராதமும் மற்றும் ஒரு மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

குவைத் சட்டப்பிரிவு 44/1968 அடிப்படையில் ஒரு மாதம் சிறை தண்டனை மற்றும் 100 குவைத் தினார்கள் அபராதம் விதிக்கப்படும் எனவும் அல்லது சம்மந்தப்பட்ட நபரின் செயலைப் பொறுத்து இரண்டில் ஏதாவது ஒன்று தண்டனையாக விதிக்கப்படும் எனவும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த ரமலான் காலத்தில் அனைவரும் பொது இடங்களில் மேல்குற்றிபிட்ட அறிவிப்பை கடைபிடிக்கவும், அவசரகால உதவிகளுக்கு 24×7 நேரத்திலும் 112-ஐ தொடர்பு கொள்ளலாம் எனவும் உள்துறை அமைச்சகம் அறிவிப்பு செய்துள்ளது.