குவைத் டிஜிட்டல் சிவில் ஐடியை பயண ஆவணமாகப் பயன்படுத்தலாம்..!!

Digital Civil ID can be used as a travel document
Digital Civil ID can be used as a travel document. (Photo : IIK)

குவைத்திற்கு தற்போது வருகை மற்றும் புறப்படுவதற்கு அனைத்து துறைமுகங்களிலும் டிஜிட்டல் சிவில் ஐடி “குவைத் மொபைல் ஆப்” பயண ஆவணமாக அங்கீகரிக்கப்படும் என்று சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் அறிவித்துள்ள்ளது.

மேலும், இது குறித்து குவைத் விமான நிலையத்தில் இயங்கும் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : COVID-19 க்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்ட ஜப்பானிய மருத்துவம் குவைத்தில் வெற்றி..!!

அந்த சுற்றறிக்கையில், சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலின் அடிப்படையில், உலகெங்கிலும் உள்ள நாடுகளின் துறைமுகங்கள், விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களில் டிஜிட்டல் சிவில் ஐடியைப் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“My Identity” விண்ணப்பத்தைப் பயன்படுத்தி வெளிநாட்டினருக்கு குவைத்துக்குள் நுழையவும் வெளியேறவும் அனுமதிக்குமாறு,

வெளிநாட்டில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள குவைத் தூதரகங்கள் போன்ற உள்துறை அமைப்புகளுக்கும் அனுப்புமாறு வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத் மனிதவள ஆணையம் 60 வயதுக்கு மேற்பட்ட 68,318 வெளிநாட்டினரின் பட்டியலைத் தயாரித்துள்ளது..!!

குவைத்தில் வைரஸின் பாதிப்புகள் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் சுகாதார அமைச்சகத்தின் அதிகாரிகளால் அறிவியுறுத்தப்பட்டுள்ள சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுமாறு குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : அரபு நாடுகளின் சாலை தரப் பட்டியலில் குவைத் 6 வது இடத்திற்கு முன்னேற்றம்..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter