இந்தியா உட்பட 31 நாடுகளைச் சேர்ந்தவர்கள் குவைத்துக்குள் நுழைய அனுமதி இல்லை என்ற முடிவு தொடரும் – DGCA

DGCA maintains ban on passengers from 31 countries
DGCA maintains ban on passengers from 31 countries. (image credit : Q8india)

குவைத்தில் சுகாதாரம், கல்வி மற்றும் பிற அரசாங்க நிறுவனங்களில் சேவைகளை வழங்குவதில் அத்தியாவசியமாகக் கருதப்படும் மருத்துவர்கள், செவிலியர்கள், பொறியாளர்கள், நீதிபதிகள், பிற வல்லுநர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் போன்ற வெளிநாட்டு ஊழியர்களின் முறையான பட்டியல் எதுவும் தயாரிக்கப்படவில்லை.

மேலும், இந்தியா உட்பட 31 நாடுகளைச் சேர்ந்தவர்கள் குவைத்துக்குள் நுழைய அனுமதி இல்லை என்ற முடிவு தொடரும் என்று சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (DGCA) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் இயல்பு நிலைக்கு திருப்புவதற்கான திட்டத்தின் நான்காம் கட்டம் தொடங்குவதற்கான தேதி அறிவிப்பு..!!

DGCA இயக்குநர் ஜெனரல் ஷேக் சல்மான் அல்-ஹமூத் தலைமையில் குவைத் சர்வதேச விமான நிலையத்தில் வர்த்தக விமானங்களை மீட்டெடுப்பதற்கான உச்சக் குழுவின் கூட்டத்தைத் தொடர்ந்து இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டங்களின் நோக்கம் விமானங்களை இயக்குவதற்கான நடைமுறைகளை மறுஆய்வு செய்வதோடு, கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய உள்ளூர் மற்றும் சர்வதேச முன்னேற்றங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க : குவைத்தில் 60 வயதடைந்துவர்கள் மற்றும் பல்கலைக்கழக பட்டம் இல்லாதவர்கள் கவனத்திற்கு..!!

தடைசெய்யப்பட்ட பட்டியலில் உள்ள 31 நாடுகளின் பட்டியலைத் திருத்துவது என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில், இந்த நாடுகளைச் சேர்ந்த நாட்டினர் குவைத்துக்குள் நுழைவதைத் தடுக்கும் பட்டியலில் நாடுகளைச் சேர்க்கவோ அல்லது நீக்கவோ சுகாதார அமைச்சிலிருந்து எந்த உத்தரவும் வரவில்லை என்று DGCA தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : குவைத்திலிருந்து தமிழகம் வரவிற்கும் விமானங்களின் அட்டவனை வெளியீடு..!!

சுகாதார அதிகாரிகளிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்களைப் பெறாவிட்டால், இந்தத் தடை தொடரும் என்றும், உலக சுகாதார அமைப்பின் தொற்றுநோய் குறித்த சமீபத்திய அறிக்கைகளின் அடிப்படையில் ஒவ்வொரு 10 நாட்களுக்கு ஒருமுறை நாடுகளின் பட்டியலை சுகாதார அதிகாரிகளால் மதிப்பாய்வு செய்யபடுவதாகவும் DGCA தெரிவித்துள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms