குவைத் உட்பட 6 வளைகுடா நாடுகளில் கொரோனா நோய்தொற்று பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை விவரங்கள்..!!

Details of the COVID-19 cases in 6 Gulf countires including Kuwait.

சவுதி, கத்தார், அமீரகம், ஓமன், குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் தற்போதுள்ள நிலவரப்படி, கொரோனா வைரஸ் மூலம் மொத்தமாக பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 51,789 எட்டியுள்ளது.

இதுவரையில், வளைகுடாவில் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்ட நபர்களில் 8,885 பேர் கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வளைகுடாவில் 292 பேர் கொரோனா வைரஸ் பாதித்து சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.