32 நாடுகளுக்கான தடையை நீக்குவது குறித்த முடிவு அடுத்த வாரம் முடிவு செய்யப்படும் – அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் அறிவிப்பு..!!

Decision on lifting ban on 32 countries next week
Decision on lifting ban on 32 countries next week. (image credit : TimesKuwait)

குவைத்திற்கு நுழைய தடைசெய்யப்பட்ட 32 நாடுகள் மீதான தடையை நீக்குவது குறித்து அடுத்த வாரம் முடிவெடுக்கப்படும் என்று அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

குவைத் விமான நிலையத்தை வணிக விமானங்களுக்காக திறக்கும் முடிவு குவைத்தில் உள்ள சுகாதார அதிகாரிகளின் மதிப்பீட்டின் அடிப்படையில் அமைந்துள்ளது என்று அரசு தொடர்பு மையத்தின் தலைவர், அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் தாரிக் அல் முஸ்ரேம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : குவைத்தில் அரசுத் துறையில் உள்ள வெளிநாட்டினர்களின் 1,183 வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் முடக்கம்..!!

மேலும் இந்த முடிவுகள் சுகாதார அதிகாரிகளால் எடுக்கப்படுவதால், அரசாங்கம், வீட்டு மற்றும் நிறுவன தனிமைப்படுத்தல் தொடர்பான முடிவுகளையும் சுகாதார அதிகாரிகளுடன் பின்பற்றுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

குவைத்திற்குள் நுழைய 32 நாடுகளுக்கான தடையை நீக்குவது குறித்த முடிவு அடுத்த வாரம் முடிவு செய்யப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இதையும் படிங்க : குவைத்தில் பேமிலி விசாவை தனியார் துறைக்கு மாற்றுவதற்கு தடை; வெளிநாட்டவர்கள் வருத்தம்..!!

பட்டியலில் உள்ள எந்த நாடும் கொரோனாவின் பரவல் குறைவதாக அறிவித்தவுடன், இந்த பட்டியல் எந்த நேரத்திலும் அதிகரிக்கவோ குறைக்கவோ உட்பட்டது என்று அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்திற்கு உள்வரும் பயணிகளுக்கான PCR சோதனை சான்றிதழின் செல்லுபடியாகும் காலம் அதிகரிப்பு..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms