COVID-19 நோயாளிகளை குணப்படுத்த வைரஸிலிருந்து குணமடைந்தவர்கள் இரத்ததானம் செய்யவேண்டும் – குவைத் சுகாதார அமைச்சர்

COVID-19; recovered patients to donate blood says kuwait health minister.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க பிரித்தெடுக்கப்பட்ட பிளாஸ்மாவைப் பயன்படுத்த வைரஸிலிருந்து குணமடைந்தவர்கள் இரத்த தானம் செய்ய வேண்டும் என்று குவைத் சுகாதார அமைச்சர் ஷேக் Dr. பாஸல் அல்-சபா வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸிலிருந்து மீண்ட அனைத்து நபர்களும் பாதிக்கப்பட்ட நபருக்கு சிகிச்சையில் பிளாஸ்மாவைப் பயன்படுத்த இரத்த தானம் செய்யுமாறு நாங்கள் கேட்டுக்கொண்டோம், ஏனெனில் இந்த சிகிச்சையின் வெற்றி மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது” என்று ஷேக் Dr. பாஸல் அவர்கள் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

குவைத் மத்திய இரத்த வங்கி (KCBB) COVID-19 நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பிளாஸ்மாவைச் செயற்கையாக உற்பத்திச் செய்ய ஏப்ரல் 8ஆம் தேதி தொடங்கியது.

இந்த செயல்முறை முன்னர் COVID-19 நோயாளிகளாக இருந்தவர்களிடம் பிளாஸ்மாவை சேகரித்து பின்னர் நோயாளிகளின் இரத்தத்தில் மாற்றுவதன் மூலம் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது என்று KCBB-யின் இரத்த மாற்று பிரிவு இயக்குனர் Dr. ரீம் அல்-ராத்வான் அவர்கள் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் அமெரிக்க இரத்த வங்கிகளின் சங்கம் (AABB) ஆகியவற்றின் தரத்தின்படி, முன்னாள் நோயாளிகளிடமிருந்து பிளாஸ்மா எடுக்கும் பணி அவர்களின் வீட்டு தனிமைப்படுத்தல் முடிந்தவுடன் விரைவில் தொடங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்த ஒருவர், மூன்று நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க உதவ முடியும் என்று Dr. அல்-ராத்வான் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

source : Arab Times