COVID – 19 (மே,2) ; குவைத்தில் 3 பேர் மரணம் மற்றும் புதிதாக 242 பாதிப்பு..!!

Covid-19; new 242 cases detected in kuwait.

குவைத்தில் கடந்த 24 மணி (02.04.2020) நேரத்தில் மேலும் 242 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், குவைத்தில் மொத்தமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 4,619ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவை சேர்ந்த 34 வயதுடையவரும், பங்களாதேஷை சேர்ந்த 43 வயதுடையவரும், ஜோர்டானை சேர்ந்த 71 வயதுடையவரும் கொரோனா வைரஸால் கடத்த 24 மணி நேரத்தில் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதுவரை, குவைத்தில் மொத்தமாக 1,703 பேர் குணமாகியுள்ளதாகவும் மற்ற 2,883 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாகவும் மற்றும் 33 பேர் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.