COVID-19 தொற்றுநோய் பாதிப்பு எண்ணிக்கையில் சீனாவை தாண்டியது குவைத்..!!

COVID-19: Kuwait surpasses China in number of cases
COVID-19: Kuwait surpasses China in number of cases. (image credit : AFP)

குவைத்தில் ஆகஸ்ட் 31 நிலவரப்படி, மொத்த COVID-19 வழக்குகளில் குவைத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சீனாவின் பாதிப்பு எண்ணிக்கையே விட அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 463 புதிய பாதிப்புகளை குவைத் தெரிவித்துள்ளது, மொத்த COVID-19 வழக்குகளின் எண்ணிக்கை 85,109 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீன குடியரசின் தேசிய சுகாதார ஆணையத்தின்படி, ஆகஸ்ட் 30 அன்று 24:00 மணிநேர நிலவரப்படி, சீனாவில் மொத்தம் 85,048 வழக்குகள் உள்ளதாகவும், சீனாவின் 31 மாகாண பகுதிகளில், கடந்த 24 மணி நேரத்தில் 17 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தின் ஜிலீப் அல் ஷுயோக் பகுதியில் வெளிநாட்டை சேர்ந்த தாய் மற்றும் மகள் கொலை..!!

இறப்புகளின் எண்ணிக்கையில் சீனா இன்னும் குவைத்தை விட அதிகமாக உள்ளது, அதாவது குவைத்தின் 531 இறப்பை விட 4,634 இறப்புகள் பதிவாகி சீன அதிகமாக உள்ளது.

மேலும், இது குவைத்தில் இறப்பு விகிதம் சுமார் 0.006 சதவீதமாகும், சீனாவில் இறப்பு விகிதம் 0.05 சதவீதமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குணமடைந்தவர்களை பொறுத்தவரை, 80,177 பேர் மீண்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது, அதே சமயம் குவைத்தில் 77,224 பேர் மீண்டுள்ளனர் என்று புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : வளைகுடா நாடுகளில் புகையிலை நுகர்வு விகிதங்கள் அதிகம் உள்ள நாடு குவைத் : சமீபத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்

சீன அரசாங்க தரவுகளின்படி, நவம்பர் 17 ஆம் தேதி வுஹானில் முதல் COVID-19 வழக்கு கண்டறியப்பட்டது, அதேநேரத்தில் பிப்ரவரி 24 அன்று குவைத் முதல் தொற்றுநோயை அறிவித்தபோது, ​​சீனாவில் மொத்தம் 77,150 வழக்குகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இறப்புகளைப் பொறுத்தவரை, சீனா தனது முதல் அறியப்பட்ட COVID-19 மரணத்தை 61 வயதான வுஹானில் வசிப்பவர் ஜனவரி 11 அன்று அறிவித்தத, அதன் பின்னர் மூன்று மாதங்களுக்குப் பிறகு, ஏப்ரல் 4 அன்று, குவைத் தனது முதல் COVID-19 மரணத்தை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தில் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு புதிய பதிவு சேவை தொடக்கம் – MOI

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms