குவைத்தில் வருடத்திற்குள் 2.7 மில்லியன் குடிமக்கள், குடியிருப்பாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும்

Kuwait COVID-19 vaccine
(PHOTO Credit: Reuters)

ஒரு வருடத்திற்குள் சுமார் 2.7 மில்லியன் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் அப்துல்லா அல் சனத் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

சுமார் 4 மில்லியன் மக்கள்தொகையில், 67.5 சதவீத மக்கள் நோய்த்தடுப்பு சக்தி பெறுவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

குவைத் வருகை விமான டிக்கெட் கட்டணத்தில் கூடுதல் 50 தினார்!

இதுவரை, குவைத்தில் போடப்பட்டு வரும் தடுப்பூசி “ஃபைசர்-பயோஎன்டெக்” ஆகும்.

ஏனெனில், Oxford-Astrazeneca தடுப்பூசி மருந்துகள், உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (FDA) ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி அனுமதி பெற்றவுடன் குவைத்துக்கு கொண்டு வரப்படும் என்றும், சிறப்பு உறைவிப்பு பெட்டிகளில் அதனை சேமிக்க தேவையில்லை என்பதால் கிளினிக்குகளில் கொடுக்கப்படும் என்றும் அல் சனத் குறிப்பிட்டுள்ளார்.

விசா மீறலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை – குவைத் திட்டம்