COVID-19 நோய்த்தொற்று காற்று வழியாக பரவும் – குவைத் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் அதிர்ச்சி தகவல்..!!

COVID-19 can transmit via air, says KISR. (image credit : IIK)

கொரோனா வைரஸ் (COVID-19) காற்று வழியாக பரவும் என்று குவைத் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் (KISR) தெரிவித்துள்ளது.

முன்னணி குவைத் விஞ்ஞான நிறுவனமான KISR அறிக்கையில், கிருமிகள் காற்று வழியாக பரவக்கூடும் என்பதை அதன் ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்ததாக தெரிவித்தனர்.

Dr. அலி அல்-ஹுமூத் தலைமையிலான KISR இன் ஆராய்ச்சியாளர்கள் குழு மேற்கொண்ட அறிவியல் திட்டத்தில் ஜாபர் அல்-அஹ்மத் மருத்துவமனையிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளின் பகுப்பாய்வுகளின் அடிப்படையில் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில நிபந்தனைகளின் கீழ் வைரஸ் காற்று வழியாக பரவக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளது.

இந்த முடிவுகள் கிருமி இயக்கத்தின் முறைகளைப் புரிந்துகொள்வதற்கும், தொற்றுநோய்க்கு எதிரான தடுப்புக்கான பரிந்துரைகளை உருவாக்குவதற்கும் உதவும் என்று Dr. அல்-ஹுமூத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துடன் ஒருங்கிணைந்து, அதிநவீன தொழில்நுட்பத்தின் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms