குவைத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து 82 வயது மூதாட்டி குணம்..!!

Covid-19; 82 yr old woman recovered from coronavirus in kuwait.

கொரோனா வைரஸிலிருந்து 82 வயது மூதாட்டி குணமடைந்துள்ளதாக குவைத் சுகாதார அமைச்சர் ஷேக் Dr. பாஸல் அல்-சபா அவர்கள் செவ்வாய்க்கிழமை (31.03.2020) தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், குவைத்தில் மொத்தமாக கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 73ஆக உயர்ந்துள்ளது.

மேலும், அந்த மூதாட்டி இரண்டு நாட்களுக்குள் மருத்துவமனையிலிருந்து வீடுதிரும்புவார் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.