குவைத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகித்த நபர் மருத்துவமனையிலிருந்து தப்பியோட்டம்..!!

Kuwaiti women wear protective masks at the Mubarakiya Market in Kuwait City. (photo : Gulfnews)

தாய்லாந்திலிருந்து வீடு திரும்பிய குவைத்தை சேர்ந்த நபர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடிவிட்டார் என்று பாதுகாப்பு வட்டாரம் தெரிவித்துள்ளது.

வயது தெரியாத அந்த நபர், வெப்பநிலை அதிகரிப்பால் குவைத்தில் உள்ள மருத்துவ மையத்திற்குச் சென்றதாக பாதுகாப்பு வட்டாரம் குவைத் செய்தித்தாளான அல் ராயிடம் தெரிவித்துள்ளது.

அந்த நபரை முழுமையாக பரிசோதித்த பிறகு, அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு அவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரை கையாளும் மற்றொரு மருத்துவமனைக்குச் செல்லும்படி கூறப்பட்டுள்ளது.

ஆனால், இந்த செய்தியைக் கேட்டதும் அவர் மருத்துவ மையத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார், இந்த சந்தேக நபரைக் கண்டுபிடித்து தனிமைப்படுத்துமாறு உள்துறை அமைச்சகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானுக்குப் பிறகு மத்திய கிழக்கில் கோவிட்-19 வழக்குகளில் அதிக எண்ணிக்கையில் குவைத் உள்ளது. மேலும், சமீபத்திய வாரங்களில் கல்வி நிறுவனங்களை மூடுவது மற்றும் வைரஸ் பாதிப்புக்குள்ளான நாடுகளிலிருந்து பயணிகள் மீதான கட்டுப்பாடுகள் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை குவைத் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

source : Gulfnews