குவைத்தில் செவிலியர்கள் பலர் கொரோனா வைரஸால் பாதிப்பு..!!

coronavirus strikes nurses in mubarak hospital at kuwait.

குவைத்தின் முபாரக் அல்-கபீர் மருத்துவமனையில் வேலை செய்யும் 11 செவிலியர்களுக்கு கடந்த சில நாட்களில் நோய்தொற்று அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் நோய்தொற்று மாதிரிகள் பரிசோதனைப் பிரிவில் வேலை செய்யும் 22 ஊழியர்களுக்கும் நோய்தொற்று அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செவிலியர்கள் அனைவரும் Mahaboula பகுதியில் உள்ள ஒரு மகளிர் விடுதியில் தங்கியிருந்து வேலை செய்து வந்ததாக தகவலறிந்த சுகாதார வட்டாரங்கள் அல்-கபாஸிடம் தெரிவித்துள்ளது.