கொரோனா வைரஸ்; குவைத்தில் வெள்ளிக்கிழமை பிராத்தனைகள் தற்காலிகமாக நிறுத்தம்..!!

Coronavirus: Kuwait temporarily suspends Friday sermons, prayers.

கொரோனா வைரஸ் (கோவிட் -19) பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் வெள்ளிக்கிழமை பிராத்தனைகளை தற்காலிகமாக நிறுத்திவைக்குமாறு குவைத் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்காஃப் மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சகத்தின் அறிக்கையில், வெள்ளிக்கிழமை பிராத்தனைகளை மசூதிகளில் நிறுத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. மேலும், ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் பிராத்தனை செய்ய வேண்டும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுபோன்ற சூழ்நிலையில் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக மசூதிகளுக்கு செல்லாமல் இருப்பது தவறில்லை என்று சுகாதார அமைச்சர் டாக்டர் பசில் அல் சபா அவர்கள் தெரிவித்துள்ளார்.

source : Khaleej Times