KPA அதிகாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ்; துறைமுக வளாக கட்டிடங்கள் மூடல்..!!

Corona virus shuts KPA for 4 days. (photo ; logisticsmiddleeast)

துறைமுக வளாகத்தில் உள்ள போக்குவரத்து அமைச்சகத்தின் அதிகாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பதை உறுதிசெய்த பின்னர், குவைத் துறைமுக ஆணையம் மே 6 முதல் மே 9 வரை 4 நாட்களுக்கு துறைமுக வளாக கட்டிடத்தை மூடுவதாக அறிவித்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கட்டிடத்தின் அனைத்து தளங்களையும் முழுமையாக சுத்திகரிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக KPA உறுதிப்படுத்தியது.

துறைமுக ஆணையம் தனது ட்விட்டர் கணக்கின் மூலம் இந்த செய்தி குறித்து விளக்கமளித்தது குறிப்பிடத்தக்கது.

முன்னெச்சரிக்கை பணிகள் முடிந்ததும் அனைத்து குவைத் துறைமுகங்களிலும் பணிகள் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.