குவைத்தில் ஈத் முதல் நாளில் அணைத்து பல்பொருள் அங்காடிகளும் மூடப்படும்..!!

Cooperatives closed on First day of Eid in Kuwait. (photo : IIK)

குவைத்தில் ஈத் அல் பித்ரின் முதல் நாளில் பல்பொருள் அங்காடிகள் மூடப்படும் என்று கூட்டுறவு சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

மேலும், அனைத்து சூப்பர் மார்க்கெட்டுகளும் ஈத் இரண்டாம் நாள் காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை வேலை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈத் முதல் மற்றும் இரண்டாவது நாட்களில் கேட்டரிங் கிளைகள் மூடப்படும் என்று தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

ஈத் மூன்றாம் தினம் முதல் கேட்டரிங் கிளைகள் காலை 8:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.