குவைத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் மற்றும் உள்வரும் பயணங்களின் விதிகள் வெளியீடு..!!

"Civil Aviation" sets rules for departures and arrivals in kuwait. (image credit : Arab Times)

குவைத் சர்வதேச விமான நிலையம் வழியாக புறப்படும் மற்றும் வரும் பயணிகளுக்கான நிபந்தனைகளையும் நடைமுறைகளையும் பொது சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் அமைத்துள்ளது.

புறப்பாடு (Departure) : “குவைத் டிராவலர்” விண்ணப்பம் / இணையதளத்தில் பதிவு செய்தல், தேவைப்பட்டால் PCR சான்றிதழ் மற்றும் கொரோனா சிகிச்சைக்கான சுகாதார காப்பீடு வைத்திருக்க வேண்டும்.

  • “குவைத் – டிராவலர்” விண்ணப்பத்தில் பதிவுசெய்து மற்றும் பயணத்தின் அனைத்து நிலைகளிலும் தொடர்புடைய “பார்கோடு” சமர்ப்பிக்க வேண்டும்.
  • சுகாதார அமைச்சகத்தினால் அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களால் வழங்கப்பட்ட சுகாதார சான்றிதழைப் பெற வேண்டும்.
  • “COVID-19” வைரஸிற்கான சிகிச்சையை உள்ளடக்கிய பயண சுகாதார காப்பீட்டை குடிமக்கள் பெற வேண்டும்.
  • முகமூடிகள் மற்றும் கையுறைகள் அணிவது, ஸ்டெர்லைசர்களைப் பயன்படுத்துதல் மற்றும் சமூக தூரத்தை கடைபிடிப்பது போன்றவற்றில் சுகாதாரத் தேவைகளைப் பின்பற்ற வேண்டும்.

வருகைகள் (Arrival) : உள்வரும் பயணிகளுக்கு சிவில் ஏவியேஷன் நிர்வாகம் விதித்தவை:

  • விமானத்தில் ஏறுவதற்கு முன்பு “ஷ்லோனிக்” பயன்பாட்டை பதிவிறக்கம் செய்து பதிவு செய்ய வேண்டும்.
  • Covid-19 நோயால் பாதிக்கப்படவில்லை என்பதை நிரூபிக்கும் அங்கீகாரம் பெற்ற பரிசோதனை தேதியிலிருந்து 96 மணிநேர செல்லுபடியாகும் காலத்துடன் சுகாதார சான்றிதழை (PCR) வைத்திருக்க வேண்டும்.
  • உள்வரும் அனைத்து பயணிகளும் 14 நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தப்பட்ட காலத்திற்கு உட்படுத்தப்படுவார்கள்.
  • ஏறுவதற்கு முன்பும், வருவதிலும் அனைத்து பயணிகளின் வெப்பநிலையையும் சரிபார்க்கபடும்.
  • ஒரு விமானம் வந்தவுடன் 10% பயணிகளுக்கு சீரற்ற (Random) PCR சோதனை செய்யப்படும்.
  • முகமூடிகள் மற்றும் கையுறைகளை அணிவது, ஸ்டெர்லைசர்களைப் பயன்படுத்துதல் மற்றும் சமூக தூரத்தை கடைபிடிப்பது போன்றவற்றில் சுகாதாரத் தேவைகளைப் பின்பற்ற வேண்டும்.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms