சீன மருத்துவக் குழு இன்று (27.04.2020) குவைத் வருகை..!!

Chinese medical team to arrive in Kuwait - Amb. Hayat.

தொற்றுநோய்களில் நிபுணத்துவம் வாய்ந்த சீன மருத்துவக் குழு இன்று (27.04.2020) குவைத் வருவதாக சீனாவின் குவைத் தூதர் Sameeh Hayat அவர்கள் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மற்ற நாடுகளுக்கு உதவி வழங்குவதற்கான சீனாவின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த குழு குவைத் வரவுள்ளதாக தெரிவித்தார்.

குவைத் செய்தி நிறுவனத்திற்கு அளித்த அறிக்கையில், தூதர் Hayat அவர்கள் இந்த குழு வைரஸ் தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து குவைத் சுகாதார அமைச்சகத்தின் அதிகாரிகளுடன் கலந்துரையாடும் என்று தெரிவித்தார்.

இந்த சீன குழு தொற்று நோய்களைத் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது, தீவிர மருத்துவச் சிகிச்சை மற்றும் DNA பரிசோதனை போன்ற துறைகளில் நிபுணத்துவம் பெற்றது என்று தூதர் Hayat அவர்கள் தெரிவித்தார்.

கட்டுப்பாடு மற்றும் தடுப்பு ஆகிய துறைகளில் வைரஸை கட்டுப்படுத்தவும், எதிர்த்துப் போராடவும் உலக நாடுகளுக்கு, குறிப்பாக குவைத்திற்கு வரம்பற்ற ஆதரவை வழங்குவதில் சீன அரசாங்கத்தின் நேர்மையான முயற்சிகளுக்கு தூதர் Hayat அவர்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.