குவைத்தின் கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு சீன மருத்துவ குழு பாராட்டு..!!

Chinese medical team lauds Kuwait's anti-coronavirus measures.

குவைத்திற்கு வருகை தந்த சீன மருத்துவக் குழுவின் தலைவர், கொரோனா வைரஸ் பரவளைக் கட்டுப்படுத்த குவைத் எடுத்துள்ள நடவடிக்கைகளை பாராட்டியுள்ளார்.

கொரோனா வைரஸுக்கு எதிராக போராடுவதில் குவைத் மிகச் சிறந்த முடிவுகளை எட்டும் என்று நாங்கள் நம்புகிறோம், ”என்று சீன நிபுணர் குழுவின் தலைவர் Ruan Yuesheng அவர்கள் சனிக்கிழமை (மே,2) அறிக்கையில் சீன அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான Xinhua-விடம் தெரிவித்தார்.

திங்களன்று குவைத்திற்கு வந்த எட்டு பேர் கொண்ட இந்த குழுவில் வைரஸ் பரிசோதனை, தொற்று நோய், சுவாச நோய், தீவிர சிகிச்சை மற்றும் பாரம்பரிய சீன மருத்துவம் (TCM) உள்ளிட்ட துறைகளில் நிபுணத்துவம் பெற்ற நிபுணர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தடுப்பு மற்றும் கட்டுப்பாடு, சோதனை, சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தல் தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள சீன வல்லுநர்கள், குவைத்தின் சுகாதார அமைச்சகத்தின் அதிகாரிகள் மற்றும் குவைத்தின் மருத்துவத் துறைகளைச் சேர்ந்த நிபுணர்களுடன் பல சந்திப்புகளை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோதனை, சிகிச்சை, தனிமைப்படுத்தல், மருத்துவ பாதுகாப்புப் பொருட்களை முறையாகத் தயாரிக்கும் பணி, ​​தொற்றுநோயைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு குவைத் அரசாங்கம் மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதை நாங்கள் கண்டோம் என்று Ruan தெரிவித்தார்.

சீனாவின் தொற்றுநோய்க்கு எதிரான அனுபவங்களில் குவைத் வல்லுநர்கள் மிகுந்த அக்கறை காட்டியுள்ளனர் என்றும் Ruan சுட்டிக்காட்டினார்.

குவைத் தரப்பினரின் நல்ல நடைமுறைகளிலிருந்தும் தனது குழு கற்றுக்கொள்ள முடியும் என்று அவர் மேலும் கூறினார், “எடுத்துக்காட்டாக, வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்தவர்களின் மேலாண்மை மற்றும் தற்காலிக சோதனை மையங்களை நிறுவுதல் இதுபோன்ற நடைமுறைகள் மிகவும் புதுமையானவை, ஆக்கபூர்வமானவை, மேலும் கற்றுக் கொள்ள வேண்டியவை என்று அவர் தெரிவித்தார்.