வளைகுடாவில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்துவர இந்திய கடற்படையிடம் தயார் நிலையில் இருக்க உத்தரவு..!!

Central Government ask Indian Navy to prepare rescue standard Indians from Gulf due to COVID-19.

வளைகுடாவில் கொரோனா நோய்தொற்றுப் பிரச்சினை துவங்கிய நிலையில் பல்வேறு காரணங்களால் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை திரும்பக் கொண்டுவருவதற்காக பல்வேறு வழிகளை மத்தியரசு ஆராய்ந்து வருகிறது.

இதற்காக, வான்வழி மீட்பு நடவடிக்கைகளுக்கு திட்டமிட்டு வரும் நிலையில், வளைகுடாவுக்குச் செல்ல இந்திய கடற்படையிடம் மூன்று பெரிய போர்க்கப்பல்களை தயார் நிலையில் வைக்க மத்திய வெளியுறவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது என்று TIMES-NOW செய்தி வெளியிட்டுள்ளது.

இதன் அடிப்படையில், முதல்கட்டமாக INS ஜலாஷ்வா என்ற விமானப்படையின் பெரிய விமானம் தாங்கி கப்பல் மற்றும் போர் காலங்களில் பீரங்கி, சிறியரக போர் விமானங்கள் உள்ளிட்ட கனரக ராணுவத்திற்கு தேவையான பொருட்களை பத்திரமாக மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல பயன்படுத்தும் இரண்டு SST டேங்க் லேண்டிங் கப்பல்கள் தயார் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதை தவிர தேவைப்பட்டால், 6 SST டேங்க் லேண்டிங் கப்பல் கூட பயன்படுத்ததப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 3 கப்பலில் ஒரே நேரத்தில் கொரோனா பாதிப்பு இடைவெளி கடைபிடித்து 1,800 இந்தியர்கள் வரையில் தாயகம் அழைத்துச் செல்ல முடியும் என்றும், கப்பல் மூலம் ஒரு வழி பயணத்திற்கு 4 நாட்கள் வரை எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.