Whatsapp-ல் தவறான செய்தியை வெளியிடுவோருக்கு சிறை; குவைத் அரசு அதிரடி அறிவிப்பு..!!

Broadcasting incorrect information will leads to imprison.

வாட்ஸ்ஆப் (Whatsapp) வழியாக கொரோனா வைரஸ் பற்றிய தவறான தகவல்கள் அல்லது போலி செய்திகளை வெளியிடுவோருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்ஆப்பில் தவறான செய்திகளை வெளியிடுவோருக்கு 3 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினைக்கு எதிரான வதந்திகள் மற்றும் தவறான செய்திகளை வெளியிடுவோருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், எந்த ஒரு செய்திகளாக இருந்தாலும், அது சரி என்று உறுதிப்படுத்தப்படும்வரை அந்த செய்தியை வெளியிடுவது தவறாகும், ஏனெனில் அது சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

source : Arab Times