குவைத்தில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த சிறுமி சடலமாக மீட்பு..!!

Body of a missing girl found in a water tank
Body of a missing girl found in a water tank. (Photo : Mbs news)

குவைத்தில் காணாமல் போனதாக கூறப்பட்ட சிறுமி, தற்போது சடலமாக ஜஹ்ராவில் போலீஸ் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பாதுகாப்பு வட்டாரம் கூறுகையில், வெகுநேரம் தேடிய பின்னர் பாதுகாப்பு துறையினர் சிறுமியின் உடலை மார்வா பகுதியில் உள்ள அவரது குடும்பத்தின் வீட்டிற்கு மேலே அமைந்துள்ள ஒரு தண்ணீர் தொட்டியில் கண்டுபிடித்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Body of a missing girl found in a water tank
Body of a missing girl found in a water tank. (Photo : Arab Times)

இதையும் படிங்க : COVID-19 க்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்ட ஜப்பானிய மருத்துவம் குவைத்தில் வெற்றி..!!

மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, 6 வயது சிறுமியை வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 11) அன்று மாலை 5.30 மணி முதல் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுருந்தது.

இதையும் படிங்க : குவைத் மனிதவள ஆணையம் 60 வயதுக்கு மேற்பட்ட 68,318 வெளிநாட்டினரின் பட்டியலைத் தயாரித்துள்ளது..!!

இதற்காக பாதுகாப்பு துறை குழந்தையை கண்டுபிடிக்க தேடல் மற்றும் விசாரணை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தற்போது குழந்தை தனது குடுபத்தினர் வீட்டின் மேலே அமைந்துள்ள தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : அரபு நாடுகளின் சாலை தரப் பட்டியலில் குவைத் 6 வது இடத்திற்கு முன்னேற்றம்..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook

? Twitter