குவைத்தில் COVID-19 சோதனை மாதிரிகளை சேகரிக்கும் போலி குழு; ஜாக்கிரதை..!!

Beware of fake teams collecting Covid test Samples. (images credit : Q8india)

குவைத்தில் அமைச்சக ஊழியர்கள் போல் உடையணிந்து தாங்கள் குவைத் சுகாதார அமைச்சகத்தை சேர்ந்தவர்கள் என்று பொய்யாக கூறும் ஒரு குழு நாட்டிற்குள் சுற்றித்திரிவதாக குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : 31 நாடுகளுக்கு தடை விதித்ததன் எதிரொலி; குவைத் கல்வி அமைச்சகத்திற்கு புதிய நெருக்கடி..!!

அமைச்சக ஊழியர்களாக உடையணிந்த குவைத் சுகாதார அமைச்சகத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறும் ஒரு குழு கொரோனா சோதனைகளுக்கான மாதிரிகளைச் சேகரிப்பதாக சொல்லி சுற்றி வருவதாக பல ஆதாரங்கள் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் வணிக விமானங்களின் சேவை தொடங்கிய முதல் நாளே 10,000க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் ரத்து..!!

அவர்கள் இரத்த மாதிரிகளை சேகரிக்க குடியிருப்பாளர்களிடமிருந்து 10KD கட்டணம் வசூலிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த குழுவில் உள்ளுறை சேர்ந்தவர்களும் மற்றும் ஒரு வெளிநாட்டை சேர்ந்தவரும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : உலகளாவிய கொரோனா வைரஸின் முன்னேற்றங்களுக்கு ஏற்ப தடை விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியல் புதுப்பிக்கப்படும்..!!

இதுபோன்ற எந்த குழுக்களுடனும் கையாளும் போது எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதார அமைச்சகம் கேட்டுக்கொண்டது.

மேலும், உங்கள் கட்டிடங்களுக்குள் யாரையும் அனுமதிப்பதற்கு முன்பு சுகாதார அமைச்சகத்தின் அடையாள அட்டைகள் மற்றும் சிவில் அடையாள அட்டைகளைப் பார்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms