குவைத் வரும் 6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு PCR சோதனையிலிருந்து விலக்கு..!!

Below the age of 6 are exempted from PCR test
Below the age of 6 are exempted from PCR test. (Photo : IIK)

குவைத்திற்கு வரும் 6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு PCR சோதனை சான்றிதழ் கட்டாயம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 வயதிற்கு உட்பட்ட குவைத்துக்குச் செல்லும் குழந்தைகளுக்கு கட்டாய “PCR” சான்றிதழிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : COVID-19 க்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்ட ஜப்பானிய மருத்துவம் குவைத்தில் வெற்றி..!!

குவைத்தில் உள்ள சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அதிகாரிகளின் புதுப்பிப்புகளின் அடிப்படையில்,குவைத் சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் 6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு COVID-19 க்கான PCR தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் அறிவித்தது.

இதையும் படிங்க : குவைத் மனிதவள ஆணையம் 60 வயதுக்கு மேற்பட்ட 68,318 வெளிநாட்டினரின் பட்டியலைத் தயாரித்துள்ளது..!!

உலகெங்கிலும் உள்ள தொற்றுநோயின் நிலைமைகள் குறித்து குவைத் சுகாதார அதிகாரிகளால் தொடர்ந்து மதிப்பாய்வு செய்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முன்னதாக இந்த PCR சோதனைச் சான்றிதழின் செல்லுபடியாகும் காலம் குவைத்துக்கு வந்ததும் 72 மணிநேரத்திற்கு (3 நாட்கள்) பதிலாக 96 மணிநேரம் (4 நாட்கள்) ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : அரபு நாடுகளின் சாலை தரப் பட்டியலில் குவைத் 6 வது இடத்திற்கு முன்னேற்றம்..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms3