32 நாடுகளுக்கான தடை பட்டியல் வியாழக்கிழமை மதிப்பாய்வு செய்யப்படும்..!!

Ban list for the 32 countries will be reviewed on Thursday
Ban list for the 32 countries will be reviewed on Thursday. (Image credit : TimesKuwait)

அமைச்சர்கள் கவுன்சில் நேற்று (செப்டம்பர் 7) அதன் கூட்டத்தில், அடுத்த வியாழக்கிழமை அன்று குவைத்திற்குள் நுழைய தடைசெய்யப்பட்டுள்ள 32 நாடுகளின் பட்டியலை மறுஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது என்று அல்-கபாஸ் தினசரி செய்தி தெரிவித்துள்ளது.

கூட்டத்தின் போது, ​​தடை பட்டியலில் உள்ள நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் நிலை மற்றும் தொற்றுநோய் பரவுவதற்கான குறிகாட்டிகள் மற்றும் எடுக்கப்பட வேண்டிய தகுந்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை சுகாதார அதிகாரிகள் அமைச்சர்கள் சபைக்கு ஒப்படைப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : COVID-19 க்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்ட ஜப்பானிய மருத்துவம் குவைத்தில் வெற்றி..!!

சுகாதார அதிகாரிகளின் முடிவுகளை பொறுத்து இந்த பட்டியல் எண்ணிக்கையில் குறையவும் செய்யலாம் அல்லது ஏறவும் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் எண்ணிக்கை மற்றும் புதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இந்த வாரம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத் மனிதவள ஆணையம் 60 வயதுக்கு மேற்பட்ட 68,318 வெளிநாட்டினரின் பட்டியலைத் தயாரித்துள்ளது..!!

தடைக்கு உட்பட்ட நாடுகள் பின்வருமாறு:

இந்தியா, ஈரான், சீனா, பிரேசில், கொலம்பியா, ஆர்மீனியா, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், சிரியா, ஸ்பெயின், சிங்கப்பூர், போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, இலங்கை, நேபாளம், ஈராக், மெக்சிகோ, இந்தோனேசியா, சிலி , பாகிஸ்தான், எகிப்து, லெபனான், ஹாங்காங், இத்தாலி, வடக்கு மாசிடோனியா, மால்டோவா, பனாமா, பெரு, செர்பியா, மாண்டினீக்ரோ, ஆப்கானிஸ்தான், டொமினிகன் குடியரசு மற்றும் கொசோவ் ஆகிய நாடுகளாகும்.

இதையும் படிங்க : அரபு நாடுகளின் சாலை தரப் பட்டியலில் குவைத் 6 வது இடத்திற்கு முன்னேற்றம்..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms3

Related posts

குவைத் விமான நிலைய கட்டிடத்திற்குள் பயணிகளை தவிர யாருக்கும் அனுமதி இல்லை – DGCA

Editor

குவைத் உள்ளிட்ட நாடுகளில் அமைதியான சூழல் நிலவுவதால் அச்சப்படத் தேவையில்லை…!

Editor

குவைத் பல்கலைக்கழகம் 2019-2020 கல்வியாண்டை ஆன்லைனில் மீண்டும் தொடங்குவதற்கான தேதி அறிவிப்பு..!!

Editor