போலி நிறுவனங்களின் விசாவில் குவைத்தில் உள்ள வெளிநாட்டவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை..!!

Around 100,000 expats under fake companies to leave Kuwait. (image credit : IIK)

குவைத்தில் விசா வர்த்தகர்களைக் கட்டுப்படுத்தவும், போலியான நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளதால் சுமார் 100,000 வெளிநாட்டினர் குவைத்தை விட்டு வெளியேரும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத் தகவல் அமைச்சகத்திலிருந்து 23 வெளிநாட்டு ஊழியர்கள் பணிநீக்கம்..!!

அல் கபாஸ் அரபு செய்தித்தாளின் அறிக்கையின்படி, விசாக்கள் விற்ற குற்றச்சாட்டில் சுமார் 450 போலி நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நிறுவனங்களிடமிருந்து சுமார் 100,000 வெளிநாட்டவர்கள் விசாக்களை வாங்கியுள்ளனர் என்றும், உண்மையில் அவர்கள் இந்த நிறுவனங்களுக்கு ஒருபோதும் பணியாற்றவில்லை என்றும், இந்த நிறுவனங்கள் கட்டுப்பாடுகளுடன் மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் 500 மது பாட்டில்களுடன் இந்தியர் ஒருவர் கைது..!!

அந்த அறிக்கையின்படி, இந்த நிறுவனங்கள் வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்கியுள்ளதாகவும், அவர்கள் யாரும் நிறுவனத்தில் வேலை செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : வெளிநாட்டவர்கள் குவைத் திரும்ப மூன்று கட்டங்களாக அனுமதிக்க உள்துறை அமைச்சகம் பரிந்துரை..!!

மேலும் அந்த அறிக்கையில், இந்த நிறுவனங்களின் கீழ் பல தொழிலாளர்கள் ஏற்கனவே குவைத்தை விட்டு வெளியேறியுள்ளனர் என்றும், அதிகாரிகள் அவர்கள் மீது கடுமையான சோதனையை தொடங்கியுள்ளதாகவும், மற்றவர்கள் தங்கள் விமானங்கள் மீண்டும் தொடங்கும் வரை காத்திருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms