30 ஆண்டுகளுக்கும் மேலாக குவைத்தில் கணக்காளராக (CA) பணிபுறிந்து வந்த திரு சந்திரா அவர்கள் மரணம்..!!

An renowned Chartered accountant passed away in kuwait
An renowned Chartered accountant passed away in kuwait. (image credit : IIK)

குவைத்தில் பிரபல கணக்காளர் (Chartered Accountant) திரு சந்திரா அவர்கள் 2020 ஆகஸ்ட் 29ஆம் தேதி தனது 60 வயதில் காலமானார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது.

திரு சந்திரா தணிக்கை நடைமுறையின் தலைவராகவும், RSM இன்டர்நேஷனலில் IFRS தலைமைக் குழுவின் உறுப்பினராகவும் இருந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தின் ஜிலீப் அல் ஷுயோக் பகுதியில் வெளிநாட்டை சேர்ந்த தாய் மற்றும் மகள் கொலை..!!

மேலும், அவர் 1984 ஆம் ஆண்டு முதல் 30 ஆண்டுகளுக்கும் மேலாக குவைத்தில் கணக்காளர் தொழிலில் பணியாற்றி வந்தார் என்றும், தணிக்கை மற்றும் கணக்கியல் தொழிலில் அவரது பங்களிப்பு அளவிட முடியாதது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் தனது சகாக்கள் மற்றும் வாடிக்கையாளர்களால் சமமாக மதிக்கப்பட்டார் என்றும், குவைத் மற்றும் இந்தியா இரண்டிலும் சமூக சேவை மற்றும் தன்னார்வ நடவடிக்கைகளில் அவர் மிகவும் தீவிரமாக இருந்தார் என்று தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : வளைகுடா நாடுகளில் புகையிலை நுகர்வு விகிதங்கள் அதிகம் உள்ள நாடு குவைத் : சமீபத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்

குவைத்தில் உள்ள தமிழ் சமூகத்திற்கான அவரது தொடர்பும் பங்களிப்பும் சமூகத்தால் அன்பாக நினைவுகூறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரா அவர்களுக்கு தனது மனைவி, இரண்டு மகள்கள் (சமீபத்தில் திருமணமானவர்) மற்றும் மருமகள் ஆகியோருடன் வசித்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தில் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு புதிய பதிவு சேவை தொடக்கம் – MOI

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms