ஈராக்கின் புதிய அமைச்சரவைக்கு குவைத் அமீர் வாழ்த்து..!!

Amir of Kuwait congratulates Iraqi new gov't on parliament confidence. (photo : Arab Times)

ஈராக் ஜனாதிபதி Dr. பர்ஹாம் சாலிஹ் மற்றும் பிரதமர் முஸ்தபா அல்-கஸ்மி ஆகியோருக்கு, குவைத் அமீர் ஷேக் சபா அல்-அஹ்மத் அல்-ஜாபிர் அல்-சபா அவர்கள் இன்று (மே 7) தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் நம்பிக்கையை வென்றதற்காக குவைத் அமீர் அவர்கள் ஈராக்கின் புதிய அமைச்சரவையை வாழ்த்தினார்.

மேலும், ஈராக்கின் தலைமை மற்றும் அதன் மக்களின் செழிப்புக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

குவைத்தின் மகுட இளவரசர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபிர் அல்-சபா மற்றும் பிரதம மந்திரி ஷேக் சபா கலீத் அல்-ஹமத் அல்-சபா அவர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதாக குவைத் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.