குவைத்தில் முன்னர் வழங்கப்பட்ட விசா உடையவர்கள், நாட்டிற்குள் வராமல் இருந்தால் விசாக்கள் ரத்து..!!

All Visa issued earlier and not entered Kuwait stands cancelled. (photo : IIK)

குவைத்தின் விமான நிலையம் மூடப்படுவதற்கு முன்னர் வழங்கப்பட்ட விசிட் விசா, குடும்ப விசா அல்லது பணி விசாக்கள் உள்ளிட்ட அனைத்து விசா உடையவர்கள் நாட்டிற்குள் வாராமல் இருந்தால் அவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஒரு தகவல் ஆதாரம் உறுதிப்படுத்தியுள்ளது.

தற்போது, ​​அவர்கள் குவைத்துக்குள் நுழையவோ அல்லது அவர்களின் விசாவின் செல்லுபடியை புதுப்பிக்கவோ எந்த வழியும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போது விசா வழங்கும் பிரிவு மூடப்பட்டுள்ளது என்றும், அடுத்த அறிவிப்பு வரை புதிய விசா வழங்கப்படாது என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன.

இருப்பினும், ஏற்கனவே குவைத்துக்குள் நுழைந்தவர்களுக்கு தங்குவதற்கான அனுமதியை ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0

Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

Twitter : https://twitter.com/kuwaittms?s=08